நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல நடிகை! நடிகையின் கணவர் கைது? திடீர் ட்விஸ்ட்!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி. 32 வயதான இவருக்கு பிரகாஷ் குமார் என்ற கணவர் உள்ளார். நடிப்பது மட்டுமின்றி, Youtube சேனலும் நடத்தி வந்த ரியா குமாரி, தனது கணவனை விட அதிகமாக வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், ரியா குமாரியும், அவரது கணவர் பிரகாஷ் குமாரும், நேற்று காலை 6 மணிக்கு, காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், பிரகாஷ் குமாரிடம் இருந்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்ததாகவும், அதனை தடுக்க முயன்ற ரியா குமாரி, சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ரியா குமாரியின் மரணத்தின் மீது சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தன்னை விட அதிகம் சம்பாதிப்பதால், ரியா குமாரியின் மீது, பிரகாஷ் குமாருக்கு கோபம் இருந்துள்ளது. இதுமட்டுமின்றி, ரியாவின் நடத்தையின் மீதும், பிரகாஷ் சந்தேகத்தில் இருந்துள்ளார்.

இதன்காரணமாக, அவரே தன்னுடைய மனைவியை கொலை செய்திருக்கலாம் என்று ரியாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவரை கைது செய்துள்ள போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முழுவதும் முடிந்த பிறகு தான், உண்மை என்னவென்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.