ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.