நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மயில்சாமி மறைவுக்கு ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the sudden demise of Noted Tamil comedy actor Mayilsamy .
— CP Radhakrishnan (@CPRGUV) February 19, 2023
My heartfelt condolence to his family members and admirers. pic.twitter.com/PvEgc3nWqI