Connect with us

Raj News Tamil

லியோ படத்திற்கு பதிலாக ஜில்லா படம்….கடுப்பான விஜய் ரசிகர்கள்

சினிமா

லியோ படத்திற்கு பதிலாக ஜில்லா படம்….கடுப்பான விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று வெளியான நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 850 க்கும் அதிகமான திரையரங்குகளில் லியோ படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரியா தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டது. அப்போது லியோ படத்தில் சத்தம் இல்லாதால் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் என்னை செய்வது என்று தெரியாமல் திரையரங்க நிர்வாகிகள் லியோ படத்திற்கு பதிலாக ஜில்லா படத்தை போட்டுள்ளனர்.

இதில் கடுப்பான விஜய் ரசிகர்கள் லியோ படத்தை போடுமாறு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More in சினிமா

To Top