Connect with us

Raj News Tamil

ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடி முதலீடு!

தமிழகம்

ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடி முதலீடு!

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகியது. இந்த 2 நாள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.

மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது, தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவோம். 3.5 கோடி பயனீட்டாளர்களுக்கு மின்னணு புரட்சியை கொண்டு சேர்த்துள்ளோம்.

உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்திலும் ரிலையன்ஸ் நிறுவன திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More in தமிழகம்

To Top