முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களின் பிரிபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணத்தை கடந்த ஜுலை மாதம் அதிகரித்தன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் குறைந்த ரீசார்ஜ் கட்டணங்களை வசூலிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பக்கம் தாவின.
இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்களின் நலனுக்காக இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) அரசிடம் கோரிக்கை வைத்ததுள்ளது. அதன்படி, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மீது விதிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மனு அளித்துள்ளது.
இந்த கோரிக்கையை அரசு ஏற்றால் ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை விரைவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.