கைகளை தோளில் போட்ட அதிபர் சொன்ன அறிவுரை – தர்மசங்கடத்திற்கு ஆளான சிறுமி!

சிறுமி ஒருவரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்ட கேள்வி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இர்வின் வேலே கம்முநிட்டி என்ற கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில், அதிபர் ஜோ பைடனுடன் சிறுமி ஒருவர் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது, சிறுமியிடம் பேசிய பைடன், டேட்டிங் செய்வது குறித்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதாவது, “30 வயது வரை டேட்டிங் செய்யவே கூடாது. 30 வயதிற்கு பின்னர் தான் ஆண்களுக்கு திருமண வாழ்க்கை பற்றி புரிதல் இருக்கும்” என்று அந்த சிறுமியிடம் அவர் பேசியுள்ளார்.

இதனைக் கேட்ட பிறகு, அந்த பெண் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் இவ்வாறு பேசியிருப்பது தவறு என்றும், வேறு சிலர், “தன் பேத்தியிடம் பேசுவதைப் போல தான் அவர் பேசியிருக்கிறார்.. அதில் தவறு எதும் இல்லை” என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.