ஒவ்வொரு ஆண்டும், உலக அளவில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களுக்கு, ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. அந்த வைகயில், இந்த ஆண்டும், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 96-வது வருட ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வழங்குவதற்காக, மல்யுத்த வீரர் ஜான் சீனா அழைக்கப்பட்டார்.
அப்போது, ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாணமாக மேடைக்கு வந்த அவரை பார்த்து, அங்கிருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
இதையடுத்து, அந்த அறை இருளாக்கப்பட்டு, பின்னர், அவர் ஆடைகளுடன் அங்கு காட்சியளித்தார். அதன்பிறகு, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டது.
இது அங்கிருந்தோரை சிரிக்க வைத்திருந்தாலும், உலக மக்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.