அஜித்தின் வாலி படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்த படத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்த இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு அன்று, நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டார்.
இதையடுத்து, திரைப்படங்களில் நடிக்காத இவர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜோதிகாவின் சமூக வலைதளப் பக்கத்தில், ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.
அதில், “சூர்யா உங்களுக்கு கொடுத்த சிறந்த கிஃப்ட் எது?” என்று கேட்டிருந்தார். இதற்கு ரிப்ளை செய்த ஜோதிகா, “அவரே சிறந்த கிஃப்ட்” என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு, ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.