தளபதி விஜய் தற்போது லியோ படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படம் வெளியான பிறகு, தனது 68-வது படத்தின் ஷீட்டிங்கில் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், 20 வருடங்களுக்கு பிறகு, இந்த கூட்டணி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.