இந்த விஷயத்தில் அஜித்தை விட விஜய் தான் கில்லாடி!

விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், அஜித்தின் துணிவு திரைப்படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ்-ம், விஜயின் வாரிசு திரைப்படத்தை, லலித்குமாரும் வெளியிட உள்ளனர்.

இதன்காரணமாக, துணிவு திரைப்படத்திற்கு தான் கூடுதலான திரையரங்குகள் கிடைக்கும் என்று தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி, பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வசூல் விவகாரத்தில், அஜித்தை விட, விஜய் தான் கில்லாடி என்று கூறியுள்ளார். வலிமை படத்திற்கு பெருமளவு நல்ல விமர்சனம் கிடைத்த போதிலும், பீஸ்ட் படம் அளவிற்கு அது வசூலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.