மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில், சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஊடகங்களை சேர்ந்த பல்வேறு செய்தியாளர்கள் வருகை தந்தனர். ஆனால், நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் கடுப்பான செய்தியாளர் ஒருவர், சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருசிலர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், ஒருசிலர் எதிராகவும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.