Connect with us

Raj News Tamil

RRR படம் பார்க்க ரூ.3.5 லட்சம் செலவு செய்த Jr NTR மனைவி!

சினிமா

RRR படம் பார்க்க ரூ.3.5 லட்சம் செலவு செய்த Jr NTR மனைவி!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராமசரன் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் RRR. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், ரூபாய் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது, ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்டுள்ளது. எனவே, அங்கு சென்று, படக்குழுவினர் அப்படத்திற்கு புரோமோஷன் செய்துள்ளனர். இதன்காரணமாக, ஜூனியர் என்.டி.ஆரின் மனைவி லட்சுமியும், படக்குழுவினர்களுடன் ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அவர் அணிந்திருந்த ஆடையின் மதிப்பு, ரூபாய் மூன்றரை லட்சம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு விலை மிகுந்த உடையுடன் லட்சுமி எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top