நீதிபதி பதவி விலக வேண்டும்…வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம்

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. இதனால் எழுந்த நெருக்கடியால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். பிரதமரின் ராஜினாமாவை தொடர்ந்து, வங்காளதேசத்தின் ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு ராணுவம் கையில் எடுத்தது.

மாணவர்களின் போராட்டம் ஆங்காங்கே நீடித்து வரும் நிலையில், இன்று வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர். தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News