“6.8% தான்!” குறையும் இந்திய பொருளாதார வளர்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் கணிப்பு! ஏன் முக்கியம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும் என்று சர்வதேச நாணயநிதியமான ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள கணிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிராகரித்துள்ளார். வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டு 6.8 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கூறிய கணிப்பை ஏற்க மறுத்தார்.

நாட்டின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், நடப்பு நிதியாண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவத்துறையை டிஜிட்டல்மயமாக்கி, அடிமட்ட மக்களுக்கும் திட்டங்களின் பலன் கிடைக்கச் செய்திருப்பதன் மூலமாக, தேசத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளித்தார்.

கொரோனா ஊரடங்கினால் முன்னேறிய நாடுகளே பொருளாதார மேலாண்மையில் திணறிய போதும், இந்தியா அதனை சாதுர்யமாக கையாண்டு வென்றிருப்பதாகவும், நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார். வரும் பட்ஜெட்டுகளில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News