Connect with us

Raj News Tamil

ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் சேவையை மட்டும் பயன்படுத்துங்கள் – நரேந்திர மோடி !

இந்தியா

ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் சேவையை மட்டும் பயன்படுத்துங்கள் – நரேந்திர மோடி !

மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக மக்களிடம் பேசி வருகிறாா்.அதன்படி இன்று பேசிய அவா் நாட்டை கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும்போது, தேசம் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். நவம்பர் 26 ம் தேதியை யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டில் கொடூர தாக்குதல் நடந்த தினம் இன்று. மும்பை பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இன்றைய தினம் மற்றொரு முக்கியமான நாள். இந்த நாளில் தான், 1949 ம் ஆண்டு அரசியல் அமைப்பை, அரசியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் ஆகி உள்ளது. உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவு பிரசாரம், நாட்டிற்கு பல வாய்ப்புகளை திறந்துள்ளது. நமது பொருளாதாரத்திற்கு வலிமையை அளித்துள்ளது. நாட்டின் சமமான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் ஏற்றத்தாழ்வு கண்ட போது, உள்ளூர் பொருட்களுக்கான நமது ஆதரவானது, இந்திய பொருளாதாரத்தை வலுவாக்க உதவியது.

அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் மேற்கொள்ள வேண்டும். கையில் இருந்து பணம் கொடுக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டு எனக்கு பகிருங்கள். தீபாவளி பண்டிகையின் போது டிஜிட்டல் பரிமாற்றம் அதிகம் நடந்தது.

தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் லோகநாதன். சிறு வயதில் இருந்து ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடையை அணிவதை பார்த்து கலங்கினார். தொடர்ந்து, அத்தகைய குழந்தைகளுக்கு உதவ உறுதிமொழி எடுத்து தனது சம்பளத்தின் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்கத் துவங்கினார். போதிய வருமானம் கிடைக்காத போதும், கழிப்பறையை சுத்தம் செய்து ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி கிடைப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த பணியில் 25 ஆண்டுகளாக ஈடுபட்ட லோகநாதன், 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி உள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இது போன்ற முயற்சிகள் நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன், உதவி செய்வதற்கு ஊக்கமாக இருக்கும். வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டிற்குள் இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top