தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்த பிறகு, நடிப்பதில் இருந்து விலகிய இவர், தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படமான ’காதல் என்பது பொதுவுடமை’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த படம் குறித்து கூறிய அவர், இரண்டு வெவ்வேறு பாலினங்கள் இணைவது மட்டும் காதல் அல்ல.. இரண்டு தூய்மையான இதயங்கள் இணைவதும் காதல் தான்.. என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில், பிக்-பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, ஜெய் பீம் படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோமால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.