71 வயது நடிகருக்கு ஜோடியாக ஜோதிகா! தலைப்பு இதுதான்!

திருமணத்திற்கு பிறகு, பல்வேறு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால், நடிகை ஜோதிகா, தனது கணவர் சூர்யாவின் உதவியுடன், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜோதிகாவின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி என்பவர் தான், இந்த படத்தையும் இயக்க உள்ளார். ஜோதிகா கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான உடன்பிறப்பே என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.