சூர்யா பாணியில் மாஸ் காட்டும் ஜோதிகா! 21 வருடங்களுக்கு பிறகு!

நடிகை ஜோதிகாவும், மம்முட்டியும் இணைந்து, காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தின் இயக்குநர் தான் இந்த படத்தையும், இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்த பின், 21 ஆண்டுகளுக்கு பிறகு, பாலிவுட் சினிமாவில் ஜோதிகா நடிக்க உள்ளார்.

ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்றில் தான், ஜோதிகா நடிக்க உள்ளாராம். நடிகர் சூர்யாவும், சூரறைப்போற்று படத்தில், தொழிலதிபர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.