எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்திருந்தார்.
இது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது. இதுமட்டுமின்றி, அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையனும், டெல்லிக்கு சென்று, அமித்ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருந்தார்.
இவ்வாறு வரிசையாக, அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவரிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பபப்பட்டது. இதற்கு பதில் அளித்தபோது, கூட்டணி விஷயத்தில் அமித்ஷாவின் கருத்தை இறுதி கருத்தாக எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேலும், யாரையும் திரைமறைவில் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என்றும், டெல்லியில் அமர்ந்துக் கொண்டு, தமிழக அரசியலை பாஜக கட்டுப்படுத்தாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, இன்னொரு கட்சியை அழித்துதான் வளர வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.