“உங்கள் குழந்தைக்கு மட்டும் 3 மொழி” – விஜய்-க்கு அண்ணாமலை பதிலடி!

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில், பாஜகவின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, முக்கிய தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு நடக்கும்போது, தமிழகத்தின் தொகுதிகள் குறையாது என்று அமித்ஷா உறுதியளித்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகள் குறைகிறது என்று முதலமைச்சருக்கு கூறியது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, இன்று நடைபெற்ற த.வெ.க ஆண்டு விழாவில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து, கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “உங்கள் குழந்தைக்கும், உங்கள் பள்ளியிலும் 3 மொழி கொள்கை. ஆனால், த.வெ.க தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இரு மொழியா?. விஜய் மேடையில் பேசுவதை, வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.

RELATED ARTICLES

Recent News