2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். கட்சியின் விதிமுறைகளின்படி இவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியுடன் நிறைவடைந்துவிட்டது.
இந்நிலையில்,தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வ பெருந்தகை தற்போது தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.