மகனுக்கு பட்டாபிஷேகம், மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி : கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்களை வாட்டி வதைத்து வரும் தி.மு.க அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெறவலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக கழக அமைப்புச்செயலாளர், விருதுநகர் மாவட்ட கழகசெயலாளர்(மேற்கு) முன்னாள்அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் மாவட்ட மைய நூலகம் அருகே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில்,

திமுக அரசு மகனுக்கு பட்டாபிஷேகம், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம், மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி, ஆவின் பால் உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதைப் பற்றி சிந்திக்காத மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் முதல்வராக உள்ளார். தமிழக மக்கள் இளைஞர்களின் நலம் பற்றி சிந்திக்காமல் உள்ளார்.