கைதி ரீமேக்கில் முக்கிய மாற்றம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. வலுவான திரைக்கதையின் மூலம் மிரட்டியிருந்த இந்த திரைப்படம், 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, சாதனை படைத்தது.

தற்போது, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திரைப்படத்தில், தபு, அமலா பால் உள்ளிட்ட நடிகைகள் நடித்து வருகின்றனர்.

கதாநாயகிகள், பாடல் ஆகிய கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லாததால் தான், இந்த திரைப்படம் தனித்து நின்றது. ஆனால், இந்தியில் இவ்வாறு எடுப்பதால், இந்த படத்தின் தன்மையே மாறிவிடும் என்று தமிழ் ரசிகர்கள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.