லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. பெரும் வெற்றியை பதிவு செய்த இந்த திரைப்படம், தமிழ் சினிமாவிற்கு ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் மாறியது. இந்த திரைப்படம் தற்போது, பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இதில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில், பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, சில மாற்றங்களை படக்குழுவினர் செய்து வருகின்றனர். அந்த வகையில், இப்படத்தில் ஐட்டம் சாங் இடம்பெற்றிருப்பதாவும், இதில் ராய் லட்சுமி நடனம் ஆட இருப்பதாகவும், கூறப்படுகிறது.
பாடல்களே இல்லாமல், விறுவிறுப்பான திரைக்கதையை மட்டுமே எடுக்கப்பட்டதால் தான் கைதி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. ஆனால், மாற்றங்கள் செய்கிறேன் என நினைத்துக் கொண்டு, அந்த படத்தின் தன்மையை முழுமையாக மாற்றுகிறார்கள் என்று தமிழ் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
