4 மணி நேரம் நடுரோட்டில் நின்ற அஜித்! காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவரது திரைப்படங்களுக்காக ரசிகர்கள் ஒரு புறம் இருந்தாலும், இவரது நல்ல குணத்திற்காகவும், ரசிகர்கள் பெருகி உள்ளனர்.

இவ்வாறு இருக்க, அஜித் நல்ல குணத்தை பற்றி பேசும் விதமாக, மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “என் மனைவியின் இறுதி சடங்கிற்கு, அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்திருந்தார். இறுதி சடங்கு அனைத்தும் முடியும் வரை, சுமார் 4 மணி நேரம் ரோட்டிலேயே எனக்காக நின்றார். இந்த விஷயத்தை என்னால், மறக்கவே முடியாது” என்று தானு தெரிவித்துள்ளார்.