வெளியேறும் நாதக முக்கிய நிர்வாகி? தொண்டர்கள் அதிர்ச்சி!

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருபவர் காளியம்மாள். நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்படும் இவர், கடந்த 2 மாதங்களாக, கட்சி தொடர்பான பணிகளில் பெருமளவில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும், அவர் பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை. இதனால், இவருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே, மணக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இவ்வாறு இருக்க, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், காளியம்மாள் கலந்துக் கொள்ள இருப்பதாக, அழைப்பிதழ் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அழைப்பிதழில், காளியம்மாளின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அவரது பெயருக்கு கீழே, நாதகவில் உள்ள பொறுப்புகள் எதுவும் இடம்பெறாமல், சமூக செயற்பாட்டாளர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி சார்பற்ற நிகழ்ச்சி என்பதால், அவரது பொறுப்பை குறிப்பிடவில்லை என்று, தகவல் ஒன்று பரவி வருகிறது.

ஆனால், அந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள மற்றவர்களின் பெயர்களுக்கு பின்னால், அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் பெயரும், அவர்களின் பொறுப்பின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதன்காரணமாக, நாதகவின் பொறுப்புகளில் இருந்து, காளியம்மாள் விலக இருப்பதாக, தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக, இன்று அவர் விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News