கல்கி படத்தின் டீசர் எப்போது? புதிய அப்டேட்!

பாகுபலி படத்திற்கு பிறகு, Pan Indian Star-ஆக மாறிய பிரபாஸ், தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், இதில், பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான, சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இவ்வாறு இருக்க, தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், கமல் தான் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர, அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

அறிவியல் புனைவையும், இந்து இதிகாச கதைகளையும் மையமாக வைத்து உருவாக உள்ள இப்படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தின் புதிய டீசர் தயார் ஆகிவிட்டதாம். இந்த டீசர், இன்னும் சில நாட்களில், YouTube பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. கல்கி 2898 ஏடி திரைப்படம், வரும் மே 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News