Connect with us

Raj News Tamil

3 நாட்களில்.. கல்கியின் பிரம்மாண்ட சாதனை.. கேட்டா தலையே சுத்துதே..

சினிமா

3 நாட்களில்.. கல்கியின் பிரம்மாண்ட சாதனை.. கேட்டா தலையே சுத்துதே..

கடவுள் பெருமாள், இதுவரை 9 அவதாரங்கள் எடுத்திருப்பதாக, இந்து புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த உலகத்தில் அநியாயங்கள் அதிகரிக்கும்போது, கல்கி என்ற 10-வது அவதாரம் எடுப்பேன் என்று, கடவுள் பெருமாள் கூறியதாகவும் வரலாறு உள்ளது.

இந்நிலையில், இதனை மையமாக வைத்து, தற்போது பிரபாஸ் நடிப்பில், கல்கி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருக்கிறார்.

அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். டிரைலர் ரிலசான சமயத்தில், ரசிகர்கள் மத்தியில் கலவையான அபிப்பிராயத்தை பெற்ற இப்படம், நிச்சயம் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதனால், படத்தின் வசூல், பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில், வசூல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படம் வெளியான 3 நாட்களில் மட்டும், உலகம் முழுவதும், 415 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.

இனி வரும் நாட்களில், படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், விரைவில் பட்ஜெட்டை கடந்து, பலமடங்கு லாபம் சம்பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top