Connect with us

Raj News Tamil

2 நாட்களில் கல்கியின் வசூல்! கணிப்புகளை பொய்யாக்கிய ரசிகர்கள்!

சினிமா

2 நாட்களில் கல்கியின் வசூல்! கணிப்புகளை பொய்யாக்கிய ரசிகர்கள்!

பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் கல்கி.

இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது, மிகவும் குறைந்த அளவில் தான் இருந்தது. இதனால், இப்படம் தோல்வி அடையும் என்று சிலர் கணித்திருந்தனர்.

ஆனால் அதற்கு நேர் மாறாக, ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2 நாட்களில், ரூபாய் 149 கோடியை, இந்திய அளவில் வசூலித்துள்ளதாம். மேலும், உலக அளவில் பார்க்கும்போது, இப்படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை வைத்து பார்க்கும்போது, இப்படம் நடிகர் பிரபாஸ்-க்கு, ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்று தெரிகிறது.

More in சினிமா

To Top