கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, பாஜக நிர்வாகியை சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதியில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி அறிவழகனை போலீசார் கைது செய்தனர். இவர் திருக்கோவிலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம், மூன்றரை சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.