கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து குவாஹத்தி பகுதிக்கு, காமாக்யா என்ற விரைவு ரயில் சென்றுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கியில் உள்ள மாங்குலி பகுதிக்கு, ரயில் வந்தபோது, 2 பெட்டிகள் தடம் புரண்டு, விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 25 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.