Connect with us

Raj News Tamil

கமல் – மணிரத்னம் படத்தின் புதிய அப்டேட்!

சினிமா

கமல் – மணிரத்னம் படத்தின் புதிய அப்டேட்!

கமல் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், 1987-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படத்திற்கு பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவே இல்லை.

இவ்வாறு இருக்க, மணிரத்னம், கமலின் 234-வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் பின்னணி பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் டீசரை எடுப்பதற்கு, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவில் உள்ளார். அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு வந்த பிறகு, இப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு நடக்க உள்ளதாம்.

More in சினிமா

To Top