அஜித்தை போல் கமல் எடுத்த அதிரடி முடிவு?

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கு பிறகு, 4 வருடங்களுக்கு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த கமல், 2022-ஆம் ஆண்டு, விக்ரம் என்ற படத்தின் மூலம், ரீ எண்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியின் மூலமாக, இந்தியா முழுவதும் மிகப்பெரிய மார்கெட்டை பிடித்த அவர், தொடர்ச்சியாக வேற்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கமல் எடுத்துள்ள மிகமுக்கியமான முடிவு குறித்து, தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, இனிமேல் நடிக்கும் திரைப்படங்களில், தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுத்துள்ளாராம்.

இதற்கு முன்னர், நடிகர் அஜித்குமாரும், இதேபோல் முடிவு எடுத்து, சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News