விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்த கமல், அதன்பிறகு, பல்வேறு படங்களில், ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால், இதுவரை ஒரு படமும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இதனால், கமல் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது, இந்த வருடம் தன்னுடைய 3 படங்களை ரிலீஸ் செய்வதற்கு, கமல் முடிவு செய்துள்ளாராம்.
அதாவது, ஷங்கரின் இந்தியன் 2, 3 ஆகிய 2 படங்களும், மணிரத்னத்தின் தக் லைஃப் என்ற ஒரு படத்தையும் ரிலீஸ் செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளனர்.
இன்னும் படப்பிடிப்பையே தொடங்காமல் இருக்கும் மணிரத்னம், கமலின் இந்த முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.