Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

20 நாளில் 150 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கமல்! ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!

சினிமா

20 நாளில் 150 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கமல்! ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், 460 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, பெரும் சாதனை படைத்தது.

இதுமட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளிலும், நீண்ட நாட்களுக்கு பிறகு, கமலின் மார்கெட் உயர்ந்துள்ளது.

இதனால், பிறமொழி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும், அவருக்கு குவிந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில், வில்லனாக நடிப்பதற்கு, கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிப்பதற்கு, ரூபாய் 150 கோடி வரை, சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வெறும் 20 நாட்கள் மட்டும் தான், இந்த படத்திற்காக கால்ஷீட் வாங்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல், உறுதியாகும் பட்சத்தில், இந்த படம், இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக அமையும்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top