கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்திற்கு பிறகு, நடிகர் சிம்புவை வைத்து, புதிய படம் ஒன்றை இவர் இயக்க இருப்பதாக, அறிவிக்கப்பட்டது.
இப்படத்தை, ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மூலமாக, கமல் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. சரித்திர கால கதையம்சத்துடன் உருவாக இருந்த இப்படத்திற்கான, சில கிராபிக்ஸ் பணிகளும் தொடங்கப்பட்டது.
ஆனால், தற்போது இப்படத்தில் இருந்து, ராஜ்கமல் நிறுவனம் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படைப்பு தொடங்கப்பட்ட காலகட்டத்தில், ஓடிடி, சேட்டிலைட் உரிமங்களின் தொகை அதிக அளவில் இருந்தது.
இதனால், பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்கலாம் என்ற முடிவில், தயாரிப்பு தரப்பு இருந்தது. தற்போது, அனைத்து ஓடிடி , சேட்டிலைட் உரிமங்களின் தொகை குறைந்துவிட்டதால், தயாரிப்பு தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
எனவே, இந்த புராஜெக்டில் இருந்து, ராஜ்கமல் நிறுவனம் தற்போது வெளியேறிவிட்டதாம். இருப்பினும், இந்த கதையின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக, சிம்புவே, தற்போது இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் வெளியாகி, வெற்றி பெற்றால், பேன் இந்தியா நடிகராகவும் மாற வாய்ப்பு இருப்பதால், ரிஸ்க் எடுக்க சிம்பு முடிவு செய்துள்ளார் என்பது, இதன்மூலம் தெளிவாகியுள்ளது.