பிக்-பாஸில் இருந்து விலகும் கமல்! அதிர்ச்சி!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன், சமீபத்தில் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, தற்போது, பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-க்கு மற்றொரு காரணம் என்றால், அது நடிகர் கமல் ஹாசன்.

வார இறுதி நாட்களில், அவரது பேச்சை கேட்பதற்காகவே, பல்வேறு ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனுக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, ஓரிரு நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனராம். எனவே, வரும் சனி, ஞாயிறு எபிசோட்களை, கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது, சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.

இதனால், இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டில் இருந்தே, கமல் தொகுத்து வழங்கலாம் அல்லது சிம்புவை வைத்து நிகழ்ச்சியை நடத்தலாம் என்ற பேச்சு பிக்-பாஸ் வட்டாரங்களில் பேசப்படுவதாக, கோடம்பாக்கம் குருவி கூவுகிறது.