விக்ரம் படத்திற்கு பிறகு, எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில், கமல் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் நவம்பர் 7-ஆம் தேதி அன்று, நடைபெற உள்ளது.
ஆனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த பணியிலும், கமல் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் உள்ளது.
இவ்வாறு இருக்க, படத்தின் ஷீட்டிங் மற்றும் தேர்தல் பணிகள் ஆகிய இரண்டையும், இவர் எவ்வாறு ஒருசேர சமாளிக்கப் போகிறார் என்பது, ரசிகர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. இந்த குழப்பம், கமல் ஹாசனுக்கும் இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.