கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2-வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
அப்போது ரசிகர்கள் முன்னிலையில், நடிகர் கமல் ஹாசன் உரையாற்றினார். இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, இந்தியன் தாத்தா என்ன சொல்ல விரும்புகிறார் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த கமல், “என் மகள் மனது வைத்தால், நான் இப்போதே தாத்தா தான்” என்று பேசி சிரிக்க வைத்தார். கமலின் இந்த பேச்சை கவனித்த ஸ்ருதி ஹாசன், வேண்டாம் என்பது போல், தலையை அசைத்துக் கொண்டிருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற இளைஞரை, நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாகவும், கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இருவரும் பிரேக்-அப் செய்துக் கொண்டதாக, தகவல் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.