இந்தியன் 2 திரைப்படம், வரும் வெள்ளிக் கிழமை அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால், படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.
ஆனால், கல்கி படத்தை போல, இந்த படத்திலும், கமல் சில காட்சிகளில் மட்டுமே வருவார் என்று, தகவல் ஒன்று சமீபத்தில் பரவி வந்தது. இந்த தகவலை அறிந்த ரசிகர்களுக்கு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் ஷங்கர் ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். அப்போது, கமலின் ஸ்கிரீன் டைம் தொடர்பாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், இந்தியன் 2 படம் முழுவதும், கமல் வருவார் என்றும், அவர் திரையில் இல்லாத காட்சியிலும், மற்ற கதாபாத்திரங்கள், அவரை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஷங்கர் கொடுத்த இந்த விளக்கத்தின் மூலம், மிகப்பெரிய வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.