“ம.பி எதிர்காலத்தை மக்கள் காப்பாற்றுவார்கள்” – கமல் நாத்

வரும் நவம்பர் 17-ஆம் தேதி அன்று, மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும், தேர்தல் பிரச்சாரங்களில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான கமல் நாத், தலைநகர் போபாலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத கிளர்ச்சியாளர்களிடம் நான் பேசினேன்.

அவர்கள் முழு மனதுடன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறிவிட்டார்கள். மேலும், தங்களது நாமினேஷனை அவர்கள் திரும்பப் பெற்றுவிட்டனர்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், தேர்தல் தொடர்பான சர்வே குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கமல்நாத், “மத்திய பிரதேசத்தின் எதிர்காலத்தை, மத்திய பிரதேச மக்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்று நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று கூறினார்.

இதற்கிடையே, ஜெய் வீரு அரசியல் என்று காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் விமர்சனம் செய்தது தொடர்பாக, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல்நாத், “பாஜக தங்களது கட்சியை பற்றி தான் பேச வேண்டும். காங்கிரஸ் கட்சியை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

ஜெய் வீரு அரசியல் விமர்சனம்:-

பாலிவுட் சினிமாவில், சோலே என்ற சூப்பர் ஹிட் எவர் க்ரீன் திரைப்படம் ஒன்று உள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், மத்திய பிரதேச மாநில அரசியலில், முக்கிய அங்கம் வகித்துள்ளது.

அதாவது, சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொதுமக்களிடம் கமல் நாத் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “எனக்கும் திக்விஜய சிங்கிற்குமான நட்பு என்பது, ‘ஜெய் – வீரு’ மாதிரியானது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாஜக, “அந்த இரண்டு பேரும் திருடர்கள்” என்று பகிரங்கமாக கூறிவிட்டது. இந்த விமர்சனத்திற்கு, காங்கிரஸ் கட்சியும், தங்களது விமர்சனங்களை கூறியுள்ளது.

அதாவது, “கொடுங்கோலனாக உள்ள கபர் சிங்கை எதிர்த்து ஜெய்யும், வீருவும் சண்டை போட்டார்கள். இதேபோல், பாஜகவும், கபர் சிங் போல மாநிலத்தை கொள்ளையடித்து வருகிறது” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News