மாமன்னன் படத்தை பார்த்த கமல்…வெளியானது முதல் விமர்சனம்..!! எகிறும் எதிர்பார்ப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது மாமன்னன் படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது : நான் ஏற்கனவே மாமன்னன் படத்தை பார்த்துவிட்டேன். அரசியல் பற்றி பேசும் நல்ல படம். மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் மாரி செல்வராஜ் வகை அரசியல் மட்டும் அல்ல உதயநிதி வகையான அரசியலும் பேசும் என்றார்.

கமல் ஹாசனிடம் இருந்து நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News