ட்விட்டர் பக்கத்தில் பல்பு வாங்கிய கமல்!

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் உருவகேலி செய்த அஷீம், மணிகண்டனை, கமல் ஹாசன் கண்டித்து பேசியிருந்தார். கமலின் இந்த செயலை பிக்-பாஸ் ரசிகர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்நிலையில், மௌலி என்ற ரசிகர் ஒருவரும், கமலை ட்விட்டரில் டேக் செய்து, பாராட்டியிருந்தார்.

இதனை பார்த்த கமல், பம்மல் கே சம்பந்தம் படத்தின் இயக்குநர் மெளலி என நினைத்து, “நன்றி மொளலி. அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவை செய்யத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். உங்களைபோல் பெருமைமிகுந்த மனிதர்களின் வரிசையில் நாங்களும்” என்று பதில் அளித்தார்.

கமல் தவறாக புரிந்துக் கொண்டதை அறிந்த அந்த ரசிகர், தான் சாதாரண இணையவாசி தான் என்பதை விளக்கிச் சென்னார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.