காமராஜ் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை ராஜ் தொலைக்காட்சி இயக்குனர் ரவீந்திரன் வழங்கினர்.
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவ ராஜசேகரனின் பிறந்தநாளை யொட்டி மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளை கவுரவித்தல் மற்றும் நலத்திட்ட உதவிக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருவள்ளுர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், ராஜ் தொலைகாட்சியின் இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ராஜ் தொலைகாட்சியின் இயக்குனர் ரவீந்திரன் பிறந்தநாள் கொண்டாடும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவ ராஜசேகரனுக்கு பொண்ணாடை அணிவித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்.
தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராஜ் தொலைகாட்சியின் இயக்குனர் ரவீந்திரன் மற்றும் சிவ ராஜசேகரன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கெளரவித்தனர்.