திமுக அமைச்சரை தரக்குறைவாக பேசிய கனல் கண்ணன்…என்ன நடந்தது?

நாடாளுமன்ற திறப்பு நிகழ்வின்போது பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோலுக்கு முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியதும் விமர்சங்களுக்கு உள்ளானது. இந்து மதத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து பூஜைகள் நடத்தப்படுவதாக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் செங்கோலை பிரதமர் வணங்கிய புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் “மூச்சு இருக்கா?? மானம்?? ரோஷம்??” எனக் குறிப்பிட்டிருந்தார்.இது பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அமைச்சர் மனோ தங்கராஜை ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்தார். இவரை தொடர்ந்து இந்து முன்னணி கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் கனல் கண்ணன், மிகக் கடுமையான வார்த்தைகளால் அமைச்சர் மனோ தங்கராஜை விமர்சித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News