Connect with us

Raj News Tamil

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்: வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்!

தமிழகம்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்: வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்!

காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திகழ்கிறது. தற்போது உலகமெங்கும் அத்திவரதர் கோயில் என பிரசித்து பெற்றுவிட்டது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

மேலும், வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக திவ்ய பிரபஞ்சம் யார் முதலில் பாடுவது என்ற பிரச்சனை தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாக அனைத்து உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் வழக்கு பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு தற்காலிகமாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி, இருபிரிவினர்களும் இக்கோவிலில் திவ்ய பிரபஞ்சம் பாட தடை விதித்தது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேவராஜ் சுவாமி வைபவம் நடந்து கொண்டிருந்தபோது வடகலை தென்கலை இருபிரிவினர்களுகிடையே தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல் பாடி வரும் போது, வடக்கலை தென்கலை சேர்ந்தவர்களுக்குள் வாய் சண்டை ஏற்பட்டது . அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி விரட்டி தாக்குவதும் அவர்கள் தப்பி ஓடுவதும் அங்கிருந்து பக்தர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினர்களும் சென்று விட்டனர்.

More in தமிழகம்

To Top