உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் வாகன நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 30-ம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.
இந்த சூரசம்கார நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளி நாடுகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிட வசதிகள் தொடர்பாக, நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் கோவில் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.