பாரதிய ஜனதா கட்சி, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, 16 மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
இதில், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி நாடாளுமன்ற தொகுதியில், கங்கனா ரணாவத் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டைம்ஸ் நவ் நாளிதழ் நடத்திய மாநாட்டில், நடிகை கங்கனா ரணாவத் கலந்துக் கொண்டிருந்தார். அப்போது, ஏற்கனவே கட்சியில் இணைவது குறித்து திட்டம் இருந்ததா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நான் கட்சியின் உறுப்பினராக இருக்கிறேனோ? இல்லையோ?. ஆனால், அது எதையும் பொருட்படுத்தாமல், நான் பாரதிய ஜனதா கட்சியை ஆதாரித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இயற்கையாகவே நான் ஒரு வலதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றும் நபர் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம், இயற்கையாகவே தான் ஒரு சங்கி என்பதை, அதாவது சங்கபரிவார் அமைப்புகளின் ஆதரவாளர் என்பதை, கங்கனா ரணாவத் தெளிவுப்படுத்தியுள்ளார்.