எமர்ஜென்சி சம்பவத்தை மையமாக வைத்து புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், இந்திரா காந்தி வேடத்தில், நடிகை கங்கனா ரணாவத் நடித்து, அந்த படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இந்த படம் குறித்து தற்போது பேசியுள்ள அவர், எமர்ஜென்சி படத்தை எடுப்பதற்காக நான் நிறைய கஷ்டப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் சொத்துக்களையே அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது நிலைமை சரியாகிவிட்டது என்று கூறிய அவர், உங்கள் கனவு நிறைவேற கடினமாக உழையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.